பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்திய வழக்கறிஞர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஜாதவை சிறையில் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு சட்டங்களை திருத்த முடியாது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியா தனது உரிமையைக் கோரியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குல்பூஷண் ஜாதவ் வழக்கை நடத்த இந்திய வழக்கறிஞரை அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.