நடிகை கங்கணா ரணாவத்தை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்துப் பேசினார்.
நேற்று கங்கணாவின் அலுவலகத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்த நிலையில், இன்று அங்கு சென்ற கங்கணா இடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
திரையுலகினர் பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கங்கணாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே கங்கணா அத்தியாயம் முடிந்து விட்டது என்றும், தாங்கள் அந்த விவகாரத்தை மறந்து விட்டோம் என்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார். இந்தநிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் கங்கணா மீது விக்ரோலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.