இந்தியா - ஜப்பான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை செயலாளரும், ஜப்பான் தூதரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பாதுகாப்பு துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், ராணுவ வசதிகளை பயன்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை வரவேற்று இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாகவும், அப்போது இந்தியா உடனான உறவை வலுப்படுத்தும் ஜப்பான் பிரதமரின் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் விரைவு ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் இருதலைவர்களும் ஆய்வு செய்தனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.