தீவிர நுரையீரல் அழற்சி ஏற்பட்டதால், கொரோனாவில் இருந்து குணமடைந்த இரண்டு பேருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை நடத்த பரிந்துரைக்கப்பட்டது எனவும் அதில் முதலாவது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந்த மாத இறுதியில் சென்னையில் நடத்தப்பட்டது எனவும் எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து பெரும்பாலான நோயாளிகள் மீண்டாலும், சிலருக்கு சுவாசத் திணறல், தாறுமாறான இதயத் துடிப்பு, வயிற்றுக் கோளாறுகள், தசை மற்றும் மூட்டு வலிகள் பல வாரங்களுக்கு நீடிப்பதாக கூறப்படுகிறது.
மற்று சிலருக்கு சரிப்படுத்த முடியாத அளவுக்கு இதய, நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சையை தவிர வேறு வழியில்லை என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரானா பாதிப்புக்கு பின்னர் இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 6 மடங்கு அதிகம் என எய்ம்ஸ் இதய நோய் பிரிவு தலைவர் அம்புஜ் ராய் கூறியுள்ளார்.