டிக்டாக்கில் அறிமுகமான நண்பர் ஒருவர், ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதால் டி.வி.சீரியல் நடிகை ஒருவர் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மனசு மமதா, மவுனராகம் உள்பட பல தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளவர் ஷ்ராவனி. இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷ்ராவனியின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்த எஸ்.ஆர் நகர் காவல்துறையினர் விசாரணை யை முன்னெடுத்தனர்.
டிக் டாக்கில் ஆடல் பாடல் என பிரபலமாக வலம் வந்த காக்கி நாடாவை சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி என்பவருடன் ஸ்ராவனி நட்பாக பழகிவந்துள்ளார்
இருவரும் காதலித்து வந்த போது தனிமையில் இருப்பதை ஆபாச வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு சன்னி தொடர்ந்து ஷ்ராவனியை துன்புறுத்தி வந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வீடியோக்களை சமூக வலைதங்களில் பரப்பி விடுவேன் என கூறி கடந்த சில மாதங்களாகவே சன்னி, ஷ்ராவனியைத் மிரட்டி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.
ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட நிலையில் மேற்கொண்டு பணம் கொடுக்க இயலாததால் நடிகை ஷ்ராவனி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று கூறியிருக்கும் அவரது பெற்றோர், சன்னிக்கு எதிராக எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.
ஷ்ராவனியின் சகோதரர் சிவாவும், தனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமான டிக்டாக் பிரபலம் சன்னி, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஆபாச வீடியோ குற்றச்சாட்டுக்குள்ளான சன்னி வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தானும் நடிகை ஸ்ரவாணியும் காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் கடந்த இரண்டு வருடமாக ஸ்ரவாணி உடன் தான் தொடர்பில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் கடந்த 7 ஆம் தேதி ஸ்ரவாணி ஒரு ஆடியோவை தனக்கு அனுப்பியதாகவும் அந்த ஆடியோவில் எனது தற்கொலைக்கு தனது பெற்றோர்களும் மற்றும் சாய் என்பவரும் தான் காரணம் என்று அவர் தெரிவித்து உள்ளதாக கூறி ஆடியோவையும் வெளியிட்டு உள்ளார்.
இரு தரப்பு புகார்கள் குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்