இந்தியாவும் சீனாவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய தூதர் நிக்கோலே குட்சேவ், இந்தியாவும் சீனாவும் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.
நட்பு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளில், அந்த நாடுகள் கோரிக்கை விடுக்காமல் ரஷ்யா ஒரு போதும் தலையிடாது என்றும் அவர் கூறினார்.