உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகளில் ஒன்றானதும், சதுப்பு நிலப் புலிகளின் ஒரே புகலிடமுமான மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள சுந்தரவனக் காடுகளில் ஏறத்தாழ 4,200 கிலோ மீட்டர் பரப்பு மேற்கு வங்கத்தில் உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட புலிகள் வசித்து வருவதால் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுந்தரவனக் காடுகள் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ யூ சி என் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகப்படியான மனித குடியேற்றம், மரங்கள் வெட்டப்படுதல், நன்னீர் நிலைகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் சுந்தரவனக் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக ஐ யூ சி என் கவலை தெரிவித்துள்ளது.