பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்களில் 50 சதவிகிதத்தை, 5 ஆண்டுகளுக்குள் சூரிய மின்சக்தியால் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க பசுமை எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில், இதுவரை 270 மெகாவாட் அளவிலான மின் உற்பத்திக்கான, சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.