இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலக நாடுகளை விட மிக மிக குறைவாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3,012 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிகப்படுகின்றனர் என்றார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2.15% இருந்த கொரோனா இறப்பு விகிதம் தற்போது 1.70% ஆக குறைந்துள்ளது என்றும், 10 லட்சம் பேரில் 53 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வரை 5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.