மருத்துவ சேர்க்கையில், இப்போது உள்ள மண்டலவாரியான இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில்.
கல்லூரி அமைந்துள்ள மண்டலம் அல்லது மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 70 சதவிகிதம், மாநிலத்தின் இதர பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 30 சதவிகிதம் என்ற நடைமுறை மகாராஷ்டிராவில் பின்பற்றப்பட்டு வந்தது.
இதை அகற்றிவிட்டு நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இனிமேல் மருத்துவ சேர்க்கை நடக்கும் என மாநில கல்வித் துறை அமைச்சர் அமித் தேஷ்முக் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மராத்வாடா, விதர்பா பகுதிகளில் மற்ற பகுதிகளை விட குறைவான மருத்துவக் கல்லூரிகளே உள்ளதால் இந்த மண்டலவாரியான இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.