போதைப் பொருள் விவகாரத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படுமென மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மும்பையை மினி பாகிஸ்தான் என கங்கனா விமர்சித்ததால், அவருக்கும் மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. 2016ம் ஆண்டில் அவருடைய முன்னாள் காதலர் அத்யான் சுமன் அளித்த பேட்டியில், கங்கனா போதை பொருள் எடுத்ததுடன், தம்மையும் கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க எம்எல்ஏக்கள் 2 பேர் வலியுறுத்திருந்தனர். இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அனில் தேஷ்முக் அளித்த பேட்டியில், அத்யான் அளித்த பேட்டியின் அடிப்படையில் மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றார்.