இலங்கை கிழக்கு கடற்பகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணெயுடன் நிறுத்தப்பட்டுள்ள நியூ டைமண்ட் கப்பலில் மீண்டும் பிடித்துள்ள தீயை அணைக்க ரசாயன உபகரணங்களை இந்தியா அனுப்பியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையுடன் தீ முழுவதும் அணைக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் மீண்டும் தீப்பிடித்துள்ளது.
மொரீசியசில் ஜூலை மாதம் விபத்தில் சிக்கி ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கசிவுக்கு காரணமாக ஜப்பானின் எம்வி வாகாசியோ கப்பலை காட்டிலும் இக்கப்பல் மிகப்பெரிதாகும்.
இதனால் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் இந்திய பெருங்கடலில் மீண்டும் ஒரு இயற்கை பேரழிவு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ரசாயன உபகரணங்களை இந்தியா அனுப்பியுள்ளது. அவை சென்றடைந்ததும் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் அது தெளிக்கப்படவுள்ளது.