உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் விற்பனை நிறுவனமான IKEA, இந்தியாவில் பல கிளைகளை துவக்கும் நோக்கில் 5 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடாக திரட்ட முடிவு செய்துள்ளது.
கடந்த 2013 ல் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நேரடி அன்னிய முதலீடு செய்ய இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தனது முதல் கிளையை IKEA இந்தியாவில் திறந்தது. 5 ஆயிரம் கோடி திரட்டும் திட்டத்தில் முதல்கட்டமாக கடன் பத்திரங்கள் வாயிலாக 550 கோடியை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் மேலும் இரண்டு கிளைகள், டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் IKEAவின் கிளைகள் துவக்கப்படும் என கூறப்படுகிறது.