கேரள கடல் பகுதியில் நடுக்கடலில் தத்தளித்த 24 மீனவர்களை கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
பொன்னானி, கயம்குளம், ஆலப்புழா, முனம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 55 மீனவர்கள் 14 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் கடல் பகுதியில் நிலவிய மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக இவர்கள் மாயமானதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் டர்னியர் ரக விமானம், சேடக் ரக ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் மீனவர்களை தேடி வந்தனர். அப்போது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 24 மீனவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். எஞ்சிய மீனவர்களைத் தேடி வருவதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.