லடாக் எல்லை பதற்றத்தை தீர்ப்பது பற்றிய வழிமுறைகளை குறித்து ஆராய, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும், வரும் 10 ஆம் தேதி, மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோவில் ரஷயா நடத்தும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தை ஒட்டி இந்த சந்திப்புக்கு ஏறஃபாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ஜெய்சங்கர் நாளை மாஸ்கோ சென்றடைய உள்ள நிலையில், வாங் யி புதன் அன்று அங்கு வந்து சேருகிறார்.
இந்த சந்திப்பின் போது, 1993 ல் செய்து கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, லடாக்கில் இருந்து சீனா தனது படைகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என ஜெய்சங்கர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.