கொரோனா காலகட்டத்தில், நோயாளிகளுக்கு வீடியோ கால் மூலம் கொல்கத்தா சிறப்பு மருத்துவர்கள் 40 பேர் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய மருத்துவ சங்கமும் கொல்கத்தா மாநகராட்சியும் இணைந்து கடந்த 5 ஆம் தேதி இந்த திட்டத்தை துவக்கின.
மரபணு நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவசர சிகிச்சை அத்தியாவசியம் என்பதாலும், அவர்களால் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கு வர முடியாது என்பதாலும் இதை துவக்கியதாக ஐஎம்ஏ -வின் மேற்கு வங்க பிரிவு தெரிவித்துள்ளது.
விரைவில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.