உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட HSTDV எனப்படும் ஹைபர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வெஹிகிள் விமானத்தை வெற்றிகரமாக சோதித்து பார்த்தமைக்காக, டிஆர்டிஓ நிறுவனத்தை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.
டுவிட்டரில் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியாவை எட்டுவதில் இது ஒரு முக்கிய மைல்கல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமானம் இந்தியாவில் உருவான scramjet உந்துவிசை முறையால் இயக்கப்பட்டிருப்பதும் ஒரு சாதனை என ராஜ்நாத் சிங் பாராட்டியிருக்கிறார்.
HSTDV என்பது 20 நொடியில் நேரத்தில் 32.5 கிலோ மீட்டர் உயரத்தை ஹைப்பர்சோனிக் வேகத்தில் எட்டக்கூடிய ஆளில்லா விமானம் ஆகும். இதை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததன் மூலம் உலகில் இந்த வசதி உள்ள சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
ராணுவ பயன்பாடு மட்டுமின்றி, குறைந்த செலவில் செயற்கை கோள்களை செலுத்தவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.