கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ம் ஆண்டில் இந்தியாவிலுள்ள சிறைகளில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாட்டிலுள்ள சிறைகளில் அவற்றின் மொத்த அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள சிறைகளில் மொத்தமாக 4,03,700 கைதிகளை அடைக்க முடியும் என்ற சூழலில், கடந்த 2019 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 4,78,600 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 118.5 விழுக்காடு அதிகமாகும். 11 மாநிலங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அளவுக்கதிகமான கைதிகளை சிறைகளில் அடைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றன.