மேற்குவங்கத்தில் பப்ஜி கேமை விளையாட முடியாததால் 21வயது இளைஞர், தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடியா மாவட்டத்தில் புர்பா லால்பூர் பகுதியை சேர்ந்த, ஐடிஐ மாணவரான பிரிதம் ஹால்டர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டனர்.
விசாரணையில், இரவு நேரங்களில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்ட தனது மகன், கடந்த வாரம் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது முதலே விரக்தியாக காணப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், உயிரிழந்த இளைஞரின் தாயார் தெரிவித்துள்ளார்.