நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான சந்திரயான் 3 விண்கலம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரயான்-2இல் இருந்த ஆர்பிட்டரைத் தவிர்த்து, லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் இதில் இடம்பெற்றிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, முதல் சந்திரயான் செயற்கைக்கோள் அனுப்பியுள்ள புகைப்படத்தில், நிலவின் மேற்பரப்பு துருப்பிடித்து இருப்பதை போன்று காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலவில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் நீர் மற்றும் ஆக்சிஜன் இருப்பதாக தெரியாத நிலையில் துருப்பிடித்து இருப்பதாக, அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.