பொருளாதார குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நாளை முதல் நடைபெற உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்பெற்று தப்பிச்சென்ற நீரவ் மோடி, லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரவ் மோடியை நாடுகடத்த சிபிஐ, அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கின் 2-ஆம் கட்ட விசாரணை திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் காணொலி மூலம் நீரவ் மோடி ஆஜராக உள்ளார். சாட்சிகள் மீதான விசாரணை நடக்கும் நிலையில் வழக்கில் டிசம்பர் மாதத்தில் தீர்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.