குஜராத்தில் பெய்து வரும் கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
பனஸ்கந்தா மாவட்டம் அம்பாஜி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பெய்த கனமழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்வதைக் காண முடிகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இதனிடையே மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
class="twitter-tweet">#WATCH Gujarat: Several parts of Banaskantha district face flood-like situation, following heavy rainfall. Visuals from Ambaji area. pic.twitter.com/oTTu2twrzS
— ANI (@ANI) September 6, 2020