ரயில்வேயில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைனில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்த அவர், டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடங்கும் என்றும் இந்த தேர்வுக்காக 2 கோடியே 42 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.