மும்பையில் டிசம்பர்-ஜனவரி மாதத்துக்குள் herd immunity எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்று டாடா இன்ஸ்டிடியுட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறித்து அந்த அமைப்பு ஆய்வு நடத்தி, மும்பை மாநகராட்சியிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் டிசம்பர், ஜனவரி மாதத்துக்குள் குடிசை பகுதிகளில் வாழ்வோரில் 75 சதவீதம் பேரும், பிற பகுதிகளில் 50 சதவீதம் பேரும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோராக இருப்பர் என கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், போக்குவரத்து வசதிகளை 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கலாம், அக்டோபரில் அதை 50 சதவீதமாக அதிகரித்து, நவம்பரில் முழுவதும் செயல்பட அனுமதிக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை பொறுத்தவரை கிறிஸ்துமஸுக்கு பிறகு, ஜனவரி 1இல் திறக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.