மத்திய அரசில் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ விதிக்கவில்லை என்று நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஜூலை ஒன்றாம் தேதிக்குப் பின் புதிய பணியிடங்கள், செலவின துறையின் ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு இருந்தால், அந்த பணியிங்கள் நிரப்பப்படாது என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், மத்திய அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்களா என்ற சந்தேகம் கிளம்பியது.
இது தொடர்பாக டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள நிதி அமைச்சகம், வழக்கமான நடைமுறைப்படி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, எஸ்எஸ்ஐ போன்ற முகமைகள் மூலம் மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.