ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் சலாலுதீன் பாகிஸ்தான் உளவுத்துறையின் அதிகாரி என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்ட ஆதாரத்தை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களைத் தூண்டிவிட பாகிஸ்தான் உளவுத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் புகாருக்கு வலுசேர்க்கும் வகையில் சையத் சலாலுதீன் என்ற தீவிரவாத இயக்கத் தலைவன் ஐ.எஸ்.ஐ.க்கு பணியாற்றுவதாக பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை ஆவணம் ஒன்று இந்திய அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது. சலாலுதீன் வாகனத்தின் விபரங்களும் அதில் உள்ளன. அரசின் பாதுகாப்பு பணியில் உள்ள அவர் வாகனத்தை அநாவசியமாக தடை செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் உளவுத்துறை அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.