சகோதரியின் உத்தரவால் சுஷாந்துக்காக போதை பொருட்களை வாங்கியதாக நடிகை ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுவதால் அவருக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது.
சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதைப்பொருள் புகாரில் விசாரணை மேற்கொண்ட போதை பொருள் தடுப்பு பிரிவினர், நடிகை ரியாவின் சகோதரர் ஷௌவிக் மற்றும் சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், போதை பொருள் வியாபாரி அப்துல் பாசித் பரிகாரிடம் இருந்து கஞ்சா, மரிஜுவானா போன்ற போதை பொருட்களை ஷௌவிக் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி வாங்கியதாக தெரிவித்தனர்.
இதனிடையே ரியாவின் உத்தரவின் பேரில் மேலாளர் சாமுவேல் மிராண்டா மூலம் சுஷாந்துக்காக போதைப்பொருட்களை வாங்கியதை சகோதர் ஷௌவிக் ஒப்புக் கொண்டதாகவும், இதையடுத்து ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.