பரோலில் விடுவிப்பது கைதியின் முழுமையான உரிமை ஆகாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டலில் கொடிய குற்றம் செய்த குற்றவாளிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பரோல் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை வெளியிட்ட வழிகாட்டலின் அடிப்படையில், பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் ஆகிய வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவருக்கு பரோல் வழங்குவதற்கு முன்பு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள், நடத்தை வல்லுனர்கள் கொண்ட குழுவின் ஆலோசனையைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து மத்திய அரசு இந்த வழிகாட்டலை மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது