கேரளாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து கல்வித்துறை இயக்குனர் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பேசிய அவர், தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என்றார். எனவே டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது என்ற அவர், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதற்கு ஏற்ப அனைத்து அரசு பள்ளிகளையும் தயார் படுத்தும் பணி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.