லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குப் படையினரைக் குவித்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதாக ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
லடாக்கில் லேயில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அதிகாரிகளுடன் நரவானே ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், படைவீரர்கள் மன உறுதியுடன் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவ அதிகாரிகளும், படைவீரர்களும் உலகின் தலைசிறந்தவர்கள் என்பது ராணுவத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெருமை எனக் குறிப்பிட்டார். கடந்த 3 மாதங்களாக எல்லையில் பதற்றம் நிலவுவதாகவும், அதைத் தணிக்க ராணுவ மற்றும் அதிகாரிகள் நிலையிலான பேச்சுக்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.