நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது எம்பிக்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றிய அறிவுறுத்தல்களை இரு அவைகளின் செயலகங்களும் வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் கொரோனா இல்லை எனச் சான்றுபெற்ற எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
முன்கூட்டிச் சோதனை செய்யாத உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வரும்போது வரவேற்பறையில் சோதனை செய்துகொள்ளலாம். விரைவுச் சோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்ததால் அவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கலாம். அவைக்குள் உறுப்பினர்கள் அனைவரும் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.