இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா தீர்வு காண்பதற்கான ஒரே வழி அரசு முறை சார்ந்த பேச்சுவார்த்தை தான் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் அவர் சீன வெளியுறவு அமைச்சர் யாங் யீ யை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் மண்டல மாநாட்டில் பங்கேற்க ஜெய்சங்கர் திட்டமிட்டுள்ள நிலையில் வரும் 10ம் தேதி பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அப்போது சீன வெளியுறவு அமைச்சரையும் ஜெய்சங்கர் சந்திக்க வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக்கில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சீனாவுடன் மோதல் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமே பதற்றத்தைத்தணிக்க முடியும் என்பதை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.