இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் நடுக்கடலில் இந்திய எண்ணெய் கப்பல் தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்க இலங்கை கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான தி நியூடைமண்ட் என்ற டேங்கர் கப்பல் குவைத் நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் பாரதீப் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பலில் 2,70000 டன் எண்ணெய் இருப்பதாக சொல்லப்படுகிறது. இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் 20 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்த போது இன்று காலை 7.45 மணிக்கு திடீரென்று தீ பற்றியது. தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் , விமானங்கள் மீட்புப்பணிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் ராஜபக்சே உறுதி செய்துள்ளார்.