ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தன்னை வரவேற்ற ரஷிய அதிகாரிகளுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து வணக்கம் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாஸ்கோ வந்தடைந்ததாகவும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான ஆலோசனையை எதிர்நோக்கியிருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
கூடவே அவர் பதிவிட்ட வீடியோவில் தம்மை வரவேற்ற ரஷிய அதிகாரிகளுக்கு வணக்கம் தெரிவித்த ராஜ்நாத்சிங், எதேச்சையாக கைகுலுக்க எத்தனித்த அதிகாரிக்கும் வணக்கம் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.