பிரதமர் மோடி தனது சேமிப்பு மற்றும் பரிசு பொருட்களை ஏலம் விட்டதில் கிடைத்த வருவாயை கொண்டு இதுவரை 103 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடைகள் அளித்திருப்பதாக, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிஎம் கேர்ஸ் திட்டம் துவங்கப்பட்டவுடன் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது சொந்த பணம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி, பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக அளித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பெண் குழந்தைகள் கல்வி திட்டம் முதல் கங்கை நதியை தூய்மை படுத்தும் திட்டம் வரை பொதுநல திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வழக்கம் கொண்டவர் பிரதமர் மோடி என்றும், தனக்கு கிடைத்த பரிசுகளை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த நிதி மற்றும் சொந்த்த சேமிப்பிலிருந்து இதுவரை 103 கோடி ரூபாய் அளவுக்கு பிரதமர் நன்கொடையாக வழங்கியிருப்பார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.