உள்நாட்டு விமானச் சேவையில் 60 சதவீத விமானங்களை இயக்க, விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 45 சதவீத விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு கடந்த ஜூன் 26ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 60 சதவீத விமானங்களை இயக்கலாம் எனவும், உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.