திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை முதல் மேலும் ஆயிரம் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாள்தோறும் ஏழுமலையான் கோவிலில் 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில் 9000 பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலமாகவும், 3000 பேர் இலவசமாகவும் ஏழுமலையானை தரிசித்து வந்தனர்.
இந்நிலையில், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை முதல் மேலும் ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ள திருப்பதி தேவஸ்தானம், இந்த டிக்கெட்களை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.