பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக் ஊழியர்கள் அவதூறான தகவல்களை பதிவுசெய்கின்றனர் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க்கிற்கு எழுதி உள்ள கடிதத்தில், இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தில் முக்கியமான பதவிகளை நிர்வகிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்திய மூத்த அமைச்சர்களையும் துஷ்பிரயோகம் செய்வது சிக்கலானது என்று கூறியுள்ளார்.
2019 ஆண்டில் தேர்தலுக்கு முன்னதாக பேஸ்புக் இந்தியா நிர்வாகத்தால் வலது சாரி சிந்தாந்தம் கொண்டவர்களின் பக்கங்களை நீக்குவது அல்லது அவற்றின் வரம்பு குறைக்கப்பட்டதாக அவர் புகார் கூறியுள்ளார். ஒரு நாடுகடந்த டிஜிட்டல் தளமாக, பேஸ்புக் நியாயமானதாகவும் நடுநிலையாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.