தெலுங்கானாவில் இளைஞரின் மரணத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசியல் பிரமுகரின் காரை தீ வைத்து கொளுத்தினர்.
அந்த மாநிலத்தின் கம்மம் மாவட்டம் கைகோண்டய்ய கூடம் நகராட்சி கவுன்சிலர் தர்வாத் ராமமூர்த்திக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்த 14-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தேஜாவத் ஆனந்த் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
கவுன்சிலர் தான் இளைஞரை கொலை செய்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த கவுன்சிலரை கண்ட போராட்டக்காரர்கள், காரை அடித்து உடைத்தனர்.
இதனால் கவுன்சிலர் ராமமூர்த்தி அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் காரை தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.