ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பாரமுல்லா மாவட்டத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பெருமளவிலான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
ராம்பூர் பிரிவில் பாதுகாப்பு படையினர் சுமார் 7 மணி நேரம் நடத்திய சோதனையில், 5 ஏகே ரக துப்பாக்கிகள்,1254 குண்டுகள், ஆறு கைத்துப்பாக்கிகள்,இருபதிற்கும் மேற்பட்ட கையெறி குண்டுகள், இரண்டு யுபிஜிஎல் குண்டுகள், இரண்டு கென்வுட் ரேடியோ செட்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளுக்கு அருகே உள்ள பகுதியில் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதால் அவை முன்னேற்பாடாக தீவிரவாத அமைப்புகளால் போடப்பட்டிருக்க கூடும் என கருதப்படுகிறது.