தனித்துவ சுகாதார அட்டைக்காக, மத்திய அரசு, அந்தரங்க தகவல்களை கேட்கும் என, சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மத்திய அரசு மறுத்துள்ளது.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் இந்த தனித்துவ அடையாள அட்டை அன்னைவருக்கும் வழங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த அடையாள அட்டையை பெற எல்லோரும் தங்களது பாலியல் விருப்பங்கள், அரசியல் சார்பு, ஜாதி போன்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பரவலாக தகவல் வெளியானது.
இதை மறுத்துள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், மக்களின் பொதுவான மருத்துவ விவரங்கள் மட்டுமே இந்த அடையாள அட்டையில் தொகுத்து வைக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது.