டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் பேஸ்புக் நிறுவனமும் முக்கிய பங்காற்றியுள்ளதாக, டெல்லி சட்டமன்ற குழுகுற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் Wall Street Journal இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், வெறுப்பு பேச்சுகளை நீக்கும் தனது விதிமுறைகளை இந்தியாவில் பேஸ்புக் நிறுவனம் முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து வெறுப்பை தூண்டும் வகையிலான சில பதிவுகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை என்றும், வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவும் ஒரு காரணம் எனவும் புகார்கள் எழுந்தன.
அவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட டெல்லி சட்டமன்ற அமைதி மற்றும் நல்லிணக்க குழுவினர், அடுத்த கட்ட விசாரணையின் போது பேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.