இரண்டாயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பினாகா ஏவுகணைகளை வாங்குவதற்காக, இரண்டு தனியார் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டாடா பவர் கம்பெனி மற்றும் எல்&டி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம், தானியங்கி இலக்கு திறன் கொண்ட114 ஏவுகணைகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அம்சங்களை கொண்ட 45 வாகனங்கள் ஆகியவை பெறப்பட உள்ளன.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள 6 ரெஜிமெண்ட் பகுதிகளில், இந்திய ராணுவத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட உள்ளன. இதனிடையே, ஏவுணைகளை தாங்கிச் செல்லக்கூடிய 330 வாகனங்களை பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் வழங்க உள்ளது.