கொரோனா வைரசை கட்டுப்பாடுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு உதவும் வகையில், அவசர கால நிதியாக சுமார் மூவாயிரத்து 500 கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
பொருளாதார விவகாரத்துறையின் கூடுதல் செயலாளர் சி.எஸ். மொகபத்ரா மற்றும் ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி ஆகியோரிடையே , டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம், சுகாதார மற்றும் மருத்துவ கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் ஐ.சி.யுக்கள் கொண்ட மருத்துவமனைகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.