உத்தரப்பிரதேசத்தில் கட்டமைக்கப்பட உள்ள கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் 650 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கான்பூரில் முதல் மெட்ரோ பாதையை நிர்மாணிப்பதின் மூலம் தினமும் 30 லட்சம் மக்கள் விரைவான போக்குவரத்தை அடையமுடியும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிறகு இந்தியாவில்தான் பல்வேறு நகரங்களில் ஐரோப்பிய முதலீட்டு வங்கி அதிகளவில் முதலீடு செய்துள்ளது.