நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 23 புள்ளி 9 சதவிதம் சரிந்துள்ளதாக, மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கி, முதல் 68 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய முழு ஊரடங்கே, இந்த பெரும் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த காலாண்டில், கட்டுமானத்துறை 50 சதவித அளவிற்கும், வர்த்தகம், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து துறை 47 சதவிகிதமும், உற்பத்தி துறை 39 சதவிகிதமும் சரிவை கண்டுள்ளது.
வேளாண்துறை மட்டுமே 3.4 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவர வரலாற்றில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு இது என கூறப்படுகிறது.