நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து மக்களவைச் செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில், செப்டம்பர் 14 திங்கள் காலை 9 மணிக்கு மக்களவையைக் கூட்ட குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களவை காலை 9 மணிக்கும், மாநிலங்களவை மாலை 3 மணிக்கும் கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடக்க உள்ள இந்தக் கூட்டத் தொடர் விடுமுறை அல்லாமல் தொடர்ந்து 18 அமர்வுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத் தொடருக்கு வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வெப்பப் பரிசோதனை செய்வதற்கும், தனிமனித இடைவெளியுடன் அமரச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.பி.க்கள் தங்கும் அறைகளை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.