ரிசர்வ் வங்கியின் கடன்நிறுத்திவைப்பு வசதியை பெற்ற பல நிறுவனங்கள், கொரோனா காலகட்டத்திற்கு முன்னதாகவே பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளாகி விட்டன என கடன் ரேட்டிங் நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
நிதி பரிவர்த்தனையில் ஈடுபடாத 2300 க்கும் அதிகமான பல்வேறு வகை நிறுவனங்கள் குறித்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக கிரிசில் கூறியுள்ளது.
முதல் காலாண்டில் எற்பட்ட கொரோனா இழப்புகளால் மேலும் பாதிப்புக்கு ஆளான இந்த நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் கடன் நிறுத்தி வைப்பு திட்டம் பெரிதும் உதவிகரமாக இருந்த து என கிரிசில் தெரிவித்துள்ளது.