அட்டவணை படி இயங்கும் சர்வதேச பயணியர் விமான சேவை மீதான தடை வரும் 30 ஆம் தேதி வரை தொடரும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வாக்கில், உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் மீதான தடையை மத்திய அரசு அறிவித்தது.
அதன்பின்னர் மே மாதம் 25 ஆம் தேதி முதல் கட்டமாக உள்நாட்டு சேவைகள் மூன்றில் ஒரு பங்கு துவக்கப்பட்டன. அதே சமயம் சர்வதேச விமான சேவைகள் மீதான தடை நீடிக்கிறது.
வெளிநாட்டு இந்தியர்கள் தாயகம் திரும்பவுதற்கான வந்தேபாரத் சிறப்பு விமானங்களும், வாடகை விமானங்களும் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.