நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு நடக்கிறது.
இந்த நிலையில் Diageo நிறுவனத்திடம் இருந்து கிடைத்த சுமார் 300 கோடி ரூபாயை வங்கிகளுக்கு தெரியாமல் தமது பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளில் அவர் செலுத்தியதாக, எஸ்பிஐ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இதில் அவர் குற்றவாளி என கடந்த 2017 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த பணம் தமது சொத்து வகையில் உட்பட்டது அல்ல என மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது தள்ளுபடியாகி உள்ளது.